Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் ஊரடங்கை விலக்கி கொள்வதற்கான நேரம் வந்து விட்டது - சகன்புஜ்பால்

மகாராஷ்டிராவில் ஊரடங்கை விலக்கி கொள்வதற்கான நேரம் வந்து விட்டது - சகன்புஜ்பால்

By: Karunakaran Mon, 06 July 2020 12:24:22 PM

மகாராஷ்டிராவில் ஊரடங்கை விலக்கி கொள்வதற்கான நேரம் வந்து விட்டது - சகன்புஜ்பால்

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் இந்த கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் 6-ம் கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஊரடங்கை விலக்கி கொள்வதற்கான நேரம் வந்து விட்டது என்று தேசியவாத காங்கிரஸ் மந்திரி சகன்புஜ்பால் தெரிவித்துள்ளார். .

sakhanjujbal,maharashtra,curfew,coronavirus ,சாகன்ஜுஜ்பால், மகாராஷ்டிரா, ஊரடங்கு உத்தரவு, கொரோனா வைரஸ்

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, மகாராஷ்டிராவில் ஊரடங்கை விலக்கி கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது. மராட்டியம் மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கேள்வி எழுந்துள்ளது. ஊரடங்கால் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், வேலைகள் இல்லை. பொருளாதாரம் சரிந்து விட்டது. அரசாங்கத்தின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. நோய்தொற்று நிலைமை கட்டுப்பாட்டில் இல்லாத இடத்தில் ஊரடங்கு சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளார். மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் மற்றும் டெல்லியில் கொரோனா தாக்கம் அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|