Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.99 கோடி

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.99 கோடி

By: vaithegi Wed, 01 Mar 2023 10:10:44 AM

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.99 கோடி

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இதையடுத்து சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.99 கோடியாக அதிகரித்துள்ளது

உலகம் முழுவதும் 679,972,187 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,800,189 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 652,845,592 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,326,406 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

corona,world ,கொரோனா ,உலகம்

அதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 105,285,347 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,145,661 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 102,682,399 என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,686,371 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,771 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,153,343 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,622,231 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 164,963 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 39,387,145 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|