Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

By: Monisha Thu, 16 July 2020 09:54:44 AM

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

தமிழகத்தில் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. இருப்பினும் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310ல் இருந்து 1,02,310 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,treatment,cure,discharge ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,சிகிச்சை,குணம்,டிஸ்சார்ஜ்

சென்னையில் இன்று 1,291 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,961 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் இதுவரை 1,318 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை:
அரியலூர் 1
செங்கல்பட்டு 604
சென்னை- 1484
கோவை- 68
கடலூர்- 10
தருமபுரி- 2
ஈரோடு -3
கள்ளக்குறிச்சி- 147
காஞ்சிபுரம் - 433
கன்னியாகுமரி - 43
கரூர்- 5
கிருஷ்ணகிரி- 1
மதுரை- 1188
நாகப்பட்டினம் - 12
நாமக்கல் - 41
புதுக்கோட்டை- 49
ராமநாதபுரம்- 32
ராணிப்பேட்டை- 118
சேலம் -31
சிவகங்கை - 27
தஞ்சாவூர்- 17
தேனி- 40
திருவள்ளூர்- 181
திருவண்ணாமலை- 100
திருவாரூர் -1
தூத்துக்குடி- 7
நெல்லை- 33
திருப்பூர்- 1
திருச்சி -56
வேலூர்- 189
விழுப்புரம்- 43
விருதுநகர்- 21

Tags :
|