Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் முக்கிய பிரதான சாலைகளில் சோதனைக்காக செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றம் ....நிரந்தரம்

சென்னையில் முக்கிய பிரதான சாலைகளில் சோதனைக்காக செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றம் ....நிரந்தரம்

By: vaithegi Fri, 17 June 2022 8:24:34 PM

சென்னையில் முக்கிய பிரதான சாலைகளில் சோதனைக்காக செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றம் ....நிரந்தரம்

சென்னை: தமிழகத்தில் மழையின் காரணமாக வாகனங்கள் செல்லக் கூடிய வழக்கமான பாதை சேதம் அடைந்தது மட்டும் பராமரிப்பு பணிகள், மேம்பாலம் கட்டுதல் போன்ற காரணங்களால் போக்குவரத்து பாதை மாற்றம் செய்யப்படும். அந்த வகையில் கடந்த மாதம் முக்கிய பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலை சரிவர சீர் செய்யும் பொருட்டு முதல் கட்டமாக தற்காலிகமாக சோதனையின் அடிப்படையில் போக்குவரத்து பாதை மாற்றம் செய்யப்பட்டது.

அந்த வகையில் கடந்த மே மாதம் 22ம் தேதி முதல் காலை 9 மணி முதல் 11 மணி வரையில், தாசபிரகாஷ் சந்திப்பை இணைக்கும் ராஜா அண்ணாமலை சாலை மற்றும் அழகப்பா சாலையில் ஈவேரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையின் காரணமாக தற்போது போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்துள்ளது. அதனால் இனி தாசபிரகாஷ் சந்திப்பை இணைக்கும் ராஜா அண்ணாமலை சாலை மற்றும் அழகப்பா சாலையில் ஈ.வே.ரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பில் இடது புறமாக திரும்பி டாக்டர் அழகப்பா சாலை, வள்ளியம்மாள் தெரு சந்திப்பில் வலது புறமாக திரும்பி டாக்டர் நாயர் பாயிண்ட் சந்திப்பில் வாகனங்கள் வலது மற்றும் இடது புறமாக திரும்பி அல்லது நேராக செல்லலாம்.

traffic,congestion,maintenance work,vehicles ,போக்குவரத்து ,நெரிசல் ,பராமரிப்பு பணிகள்,வாகனங்கள்


சென்னை சேத்துப்பட்டு மெக்கானிக்கல் சாலையில் உள்ள சேத்துப்பட்டு சந்திப்பில் மாலை போக்குவரத்து நெரிசல் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க செய்யப்பட்ட சோதனை ஓட்டம் தற்போது நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் பாயிண்ட் சந்திப்பில் போக்குவரத்து சந்திப்பில் பிள்ளையார் கோயில் தெரு எம்.ஜி.ஆர் நகரில் இருந்து வரும் வாகனங்கள் நேராக மேற்கு சைதாப்பேட்டை மற்றும் கிண்டி செல்ல விரும்பும் வாகனங்கள் காசி பாயிண்ட் சந்திப்பில் இடதுபுறம் திருப்பிச் சுமார் 150 மீட்டருக்கு சென்று கே.கே.நகர் RTO அலுவலகம் முன் “U” திருப்பம் மூலம் தங்கள் இலக்கை அடையலாம்.

அசோக் நகர் 12வது அவென்யூ வழியாக வரும் கனரக வாகனங்கள் கே.கே.நகர், வடபழனி மற்றும் கோயம்பேடு செல்ல விரும்பும் வாகனங்கள் வலது புறம் திரும்பி நாகாத்தம்மன் கோவில் தெரு வழியாக அசோக் நகர் 11வது அவென்யூக்கு சென்று தங்கள் இலக்கை அடையலாம். மேலும் தி.நகர் வெங்கட நாராயண சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்ல விருக்கும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பில் இடது புறம் திரும்பி சுமார் 200 மீட்டர் தூரம் சென்று Toyota Showroom அருகில் ‘U’ திருப்பம் செய்ய வேண்டும். தற்போது இந்த மாற்றங்கள் நிரந்தர போக்குவரத்து மாற்றங்கள் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

Tags :