Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இனி வரும் காலங்களில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு

இனி வரும் காலங்களில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு

By: vaithegi Wed, 14 Dec 2022 6:34:08 PM

இனி வரும் காலங்களில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு

சென்னை: ரயில் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு ... தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற வரும் நிலையில், ஒவ்வொரு துறை வாரியாக விவாதம் நடைபெற்று கொண்டு வருகிறது. அந்த வகையில் இதில் ரயில்வே துறை தொடர்பாக தற்போது ரயில்வே துறை அமைச்சர் கூறியிருப்பதாவது,

தற்போது ரயில்வேயின் ஒரு கிமீ செலவு சுமார் ரூ.1.16 ஆக உள்ளது. ஆனால் பயணிகளிடம் ஒரு கிலோ மீட்டருக்கு 45 முதல் 48 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும் அத்துடன் கடந்த ஆண்டு பயணிகள் கட்டணத்தில் ரயில்வே துறை வாயிலாக ரூ.59,000 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

railway fares,railway department ,ரயில் கட்டணம், ரயில்வே துறை

இதை தொடர்ந்து, மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமா? என கேள்வி இன்று எழுப்பப்பட்டது. இதற்கு தற்போது ரயிலில் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் 55% வரை சலுகை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரயில் கட்டணம் உயர்த்தப்படுமா? என கேள்வி ஒன்று எழுந்தபோது, இனி வரும் காலங்களில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் தெரிவித்துள்ளார். இதையடுத்து இவர் அளித்த தகவலின்படி, ரயில் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் ரயில்வே துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :