Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர் விடுமுறை ..திருப்பதி செல்லும் ரயில் சேவை திடீர் ரத்து

தொடர் விடுமுறை ..திருப்பதி செல்லும் ரயில் சேவை திடீர் ரத்து

By: vaithegi Sat, 12 Aug 2023 10:16:47 AM

தொடர் விடுமுறை    ..திருப்பதி செல்லும் ரயில் சேவை திடீர் ரத்து

சென்னை: தமிழகத்தில் சுதந்திர தினம் வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இன்று ,நாளை ,திங்கள், செவ்வாய் என்று 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால். வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது.

இதையடுத்து பொதுமக்களின் நலனுக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பிலும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கூட்டமும் தற்போது கணிசமாக அதிகரித்து உள்ளது.

tirupati,train service ,திருப்பதி , ரயில் சேவை

இந்த நிலையில், நடைமேடை பராமரிப்பு உள்ளிட்ட புதுப்பிப்பு பணி காரணமாக திடீரென சென்னை சென்ட்ரலிலிருந்து திருப்பதிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதேபோன்று, திருப்பதியிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட் உடுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags :