Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெங்களூரு-மைசூரு இடையே பயண நேரம் இனி வெறும் 75 நிமிடங்கள்தான்

பெங்களூரு-மைசூரு இடையே பயண நேரம் இனி வெறும் 75 நிமிடங்கள்தான்

By: Nagaraj Fri, 16 Dec 2022 11:45:58 PM

பெங்களூரு-மைசூரு இடையே பயண நேரம் இனி வெறும் 75 நிமிடங்கள்தான்

பெங்களூரு: பெங்களூரு-மைசூரு இடையிலான பயண நேரம் 3 மணி நேரத்தில் இருந்து இனி வெறும் 75 நிமிடங்களாக குறையுமாம். எப்படி? இப்படிதாங்க.

பெங்களூரு – மைசூர் எக்ஸ்பிரஸ் காரிடார் அடுத்த மாதம் திறக்கப்படும் என்றும், 2023 மார்ச்சில் பிரதமர் நரேந்திர மோடி முழு எக்ஸ்பிரஸ் காரிடாரையும் திறந்து வைக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பெங்களூரு-மைசூரு இடையிலான பயண நேரம் 3 மணி நேரத்தில் இருந்து வெறும் 75 நிமிடங்களாக குறையும். தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர் மற்றும் மைசூர் ஆகியவை அடங்கும். இந்த இரண்டு நகரங்களும் 140 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. கர்நாடக தலைநகர் பெங்களூரு மற்றும் மைசூர் இடையே 4 வழிச்சாலை உள்ளது.

bengaluru,mysore,travel , பயணம், பெங்களூர், மைசூர்

இந்த இரண்டு நகரங்களும் முக்கியமான நகரங்கள் என்பதால், பெங்களூரு – மைசூர் இடையே 10 வழி நெடுஞ்சாலை அமைக்க வேண்டும் என்று கர்நாடக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

நெடுஞ்சாலைப் பணிகள் 2 செட்களாக பிரிக்கப்பட்டன. அதன்படி, முதல் கட்ட பணிகள் பெங்களூரு-நிடகட்டா இடையேயும், 2வது கட்டமாக நிடகட்டா-மைசூர் இடையேயும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சாலையின் மூலம் பெங்களூரு – மைசூரு இடையிலான பயண நேரம் 3 மணி நேரத்தில் இருந்து வெறும் 75 நிமிடங்களாக குறையும்

Tags :
|