Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை -சென்னை இடையேயான 'வந்தே பாரத்' ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது.

நெல்லை -சென்னை இடையேயான 'வந்தே பாரத்' ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது.

By: vaithegi Fri, 22 Sept 2023 10:02:40 AM

நெல்லை -சென்னை இடையேயான 'வந்தே பாரத்' ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது.

சென்னை: வந்தே பாரத் ரயிலானது கடந்த 2019 -ம் ஆண்டு புதுடில்லி - வாரணாசி இடையே முதலில் இயக்கப்பட்டது. தற்போது சென்னை -மைசூர், சென்னை - கோவை என மொத்தம் 23 வந்தே பாரத் இயக்கப்பட்டு கொண்டு வருகின்றன. அதிவேகத்தில் செயல் திறன் கொண்ட இந்த ரயிலில் பயணிகளுக்கு விமானத்திற்கு நிகரான சுழலுமிருக்கைகள், ஏசி, விசாலமான ஜன்னல்கள் என சொகுசாக பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூரு, கோயம்புத்தூர் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதேபோன்று, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையேயும் வந்தே பாரத் ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

vande bharat,nellie,chennai ,வந்தே பாரத்,நெல்லை ,சென்னை

மேலும் அத்துடன் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை ரயில்வே வாரியம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் நெல்லை -சென்னை இடையேயான 'வந்தே பாரத்' ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது.

இதையடுத்து நேற்று சென்னையிலிருந்து நெல்லைக்கு இயக்கிய சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற நிலையில், தினமும் ரயில் புறப்படும் நேரத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து நாளை மறுநாள் 24-ம் தேதியன்று நெல்லையிலிருந்து 'வந்தே பாரத்' ரயிலை காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Tags :
|