Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மரடோனா இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி

மரடோனா இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி

By: Karunakaran Mon, 30 Nov 2020 11:59:12 AM

மரடோனா இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி

கால்பந்து விளையாட்டு வீரர்களில் உலக புகழ் பெற்ற டீகோ மரடோனா நவம்பர் 25 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பின் நவம்பர் 26 ஆம் தேதி இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இவரது மறைவிற்கு கால்பந்து விளையாட்டு பிரபலங்கள், உலக நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், கால்பந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும் மரடோனா ரசிகர்கள் அவரது மறைவை ஏற்க முடியாமல் துக்கத்தில் ஆழ்ந்து தவிக்கின்றனர். இந்நிலையில், ஏராளமானோர் ஒன்று கூடி கொடிகளை அசைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

viral video,maradona,funeral,football player ,வைரல் வீடியோ, மரடோனா, இறுதி சடங்கு, கால்பந்து வீரர்

மேலும் அந்த வீடியோவில் ஏதோ அறிவிப்பும் பின்னணியில் ஒலிக்கிறது. இந்த வீடியோ மரடோனா இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த வைரல் வீடியோவை ஆய்வு செய்தபோது அது, அக்டோபர் 2019 வாக்கில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

உண்மையில் இந்த கூட்டத்தில் இருப்பவர்கள் அர்ஜென்டினா அதிபர் மொராக்கோ மேக்ரிக்கு ஆதரவாளர்கள் ஆவர். அந்த வகையில் இந்த வீடியோ மரடோனா இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே போலி செய்திகளை பரப்பாதீர்கள்.

Tags :