Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 90 நிமிடங்களில் கொரோனாவை பரிசோதித்து அறியும் கருவியை கண்டுபிடித்த இங்கிலாந்து நிறுவனம்

90 நிமிடங்களில் கொரோனாவை பரிசோதித்து அறியும் கருவியை கண்டுபிடித்த இங்கிலாந்து நிறுவனம்

By: Karunakaran Sat, 19 Sept 2020 09:31:51 AM

90 நிமிடங்களில் கொரோனாவை பரிசோதித்து அறியும் கருவியை கண்டுபிடித்த இங்கிலாந்து நிறுவனம்

இங்கிலாந்து தலைநகர் லண்டன் இம்பீரியில் கல்லூரியை அடிப்படையாக கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘டிஎன்ஏநட்ஜ்’ என்ற நிறுவனம் ‘லேப்-இன்-கார்ட்ரிஜ்’ என்று சொல்லக்கூடிய ஒரு சிறிய பெட்டி வடிவிலான துரித பரிசோதனை கருவியை கண்டுபிடித்து உள்ளது. இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் இதை சோதித்து அறிந்துள்ளனர். இந்த கருவி, மிக விரைவாகவும், துல்லியமாகவும் கொரோனா பரிசோதனை முடிவை தருகிறது.

இந்த கருவி 90 நிமிடங்களில் கொரோனா இருக்கிறதா, இல்லையா என்பதை சொல்லி விடும். என்.எச்.எஸ். என்று அழைக்கப்படக்கூடிய இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை பணியாளர்கள், நோயாளிகள் மீது இந்த கருவியை கொண்டு சோதனை நடத்தப்பட்டதில், துல்லியமான முடிவுகள் கிடைத்தன. தற்போது இந்த துரித சோதனைக்கருவி லண்டனில் 8 ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தப்படுகிறது.

uk company,instrument,corona test,corona virus ,இங்கிலாந்து நிறுவனம், கருவி, கொரோனா சோதனை, கொரோனா வைரஸ்

இதுகுறித்து ராசிரியர் கிரஹாம் குக் கூறுகையில், எந்தவொரு மாதிரி பொருட்களையும் கையாள வேண்டிய அவசியமின்றி, நோயாளியின் படுக்கையில் செய்யக்கூடிய சோதனையை, தரமான ஆய்வுக்கூட சோதனைக்கு ஒப்பிடக்கூடிய துல்லியத்தன்மையை கொண்டுள்ளது இந்த முடிவுகள். நீங்கள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வர முயற்சிக்கும்போது, இது மிகவும் உறுதி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மூக்கு அல்லது தொண்டை சளி மாதிரியை எடுத்து, ரசாயனங்கள் அடங்கிய நீல நிறம் கொண்ட சிறிய கார்ட்ரிஜூக்குள் வைக்கப்படுகிறது. இது தொற்று நோயை ஏற்படுத்துகிற கொரோனா வைரசுக்கு சொந்தமான மரபணு பொருட்களின் தடயங்களை தேடுகிறது. 90 நிமிடங்களில் இதன் முடிவு தெரிந்து விடுகிறது. இருப்பினும் இதில் ஒரே நேரத்தில் ஒரு மாதிரியை மட்டுமே பரிசோதிக்க முடியும். ஒரு நாளில் 16 சோதனைகளை மட்டுமே நடத்த முடியும் என்பதுதான்.

Tags :