Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய வகை கொரோனா வைரஸ் புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து அரசு அறிவிப்பு

புதிய வகை கொரோனா வைரஸ் புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து அரசு அறிவிப்பு

By: Karunakaran Fri, 25 Dec 2020 12:45:19 PM

புதிய வகை கொரோனா வைரஸ் புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து அரசு அறிவிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இங்கிலாந்திலும் வைரஸ் பாதிப்பு அதிகமாக ஏற் பட்டது. அதன்பின் பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில், இங்கிலாந்தில் லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது.

வைரசின் இந்த புதிய மாறுபாடு வீரியமிக்கதாக இருக்கிறது. இதனால் வைரஸ் முன்பைவிட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது. இதையடுத்து இங்கிலாந்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாறுபாடு ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

uk government,corona virus,7 new symptoms,new corona virus ,இங்கிலாந்து அரசு, கொரோனா வைரஸ், 7 புதிய அறிகுறிகள், புதிய கொரோனா வைரஸ்

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை கூறுகையில், ஏற்கனவே கொரோனா அறிகுறிகளாக இருப்பதுடன் சேர்ந்து சோர்வு, பசியின்மை, தலை வலி, வயிற்றுப்போக்கு, மன குழப்பம், தசை வலி, தோல் அரிப்பு ஆகிய 7 புதிய அறிகுறிகள் தென்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் முன்பைவிட அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியிலும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது. லண்டனில் இருந்து ஜெர்மனி சென்ற பெண் ஒருவருக்கு புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :