Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாடர்னா தடுப்பூசிக்கு 50 லட்சம் டோஸ்கள் ஆர்டர் கொடுத்துள்ளதாக இங்கிலாந்து அரசு அறிவிப்பு

மாடர்னா தடுப்பூசிக்கு 50 லட்சம் டோஸ்கள் ஆர்டர் கொடுத்துள்ளதாக இங்கிலாந்து அரசு அறிவிப்பு

By: Karunakaran Tue, 17 Nov 2020 11:10:25 AM

மாடர்னா தடுப்பூசிக்கு 50 லட்சம் டோஸ்கள் ஆர்டர் கொடுத்துள்ளதாக இங்கிலாந்து அரசு அறிவிப்பு

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் அமெரிக்காவின் மாடர்னா இங்க் மருந்து நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனம் கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி இருந்தது. இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வந்தது.

uk,government,50 lakh doses,moderna vaccine ,இங்கிலாந்து, அரசு, 50 லட்சம் டோஸ், மாடர்னா தடுப்பூசி

இதில், மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது. கொரோனா வைரசால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களிடமும் இந்த தடுப்பூசி நல்ல செயல்திறனை கொண்டுள்ளது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், 94.5 சதவீதம் திறன் கொண்ட மாடர்னா தடுப்பூசியை பெற 50 லட்சம் டோஸ் ஆர்டர் கொடுத்துள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்தின் சுகாதாரத்துறை மந்திரி மேட் ஹேன்காக் கூறுகையில், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மாடர்னா தடுப்பூசி மருந்துக்கு 50 லட்சம் டோஸ்கள் ஆர்டர் கொடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Tags :
|