Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கியுள்ளது -விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை

முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கியுள்ளது -விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை

By: Karunakaran Wed, 08 July 2020 3:11:31 PM

முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கியுள்ளது -விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து 7-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 291 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாக 44 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் முதல் உலகளாவிய மருத்துவ விஞ்ஞானிகள் வரை அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து முக கவசம் அணிவதில் மிகவும் பின்தங்கி இருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது. நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானியும், இங்கிலாந்தின் உயர்மட்ட நிபுணர்கள் குழுவின் தலைவருமான வெங்கி என்ற வெங்கடராமன் ராமகிருஷ்ணன் இதுகுறித்து கூறியுள்ளார்.

face shield,coronavirus,england,vengi ,முகம் கவசம், கொரோனா வைரஸ், இங்கிலாந்து, வெங்கி

இதுகுறித்து வெங்கி கூறுகையில், முக கவசம் அணிவதிலும், அதையொட்டிய தெளிவான கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பொதுமக்களுக்கு வழங்குவதிலும் பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து மிகவும் பின்தங்கி உள்ளது. பொதுமக்கள் கை கழுவுகின்றனர். தனிமனித இடைவெளியை பின்பற்றுகின்றனர். ஆனால் முகத்தை மறைப்பது இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலையை தடுக்க வேண்டும் என்றால், கை கழுவுவதுடன், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதுடன், முக கவசம் அணிவதும் சம அளவில் முக்கியமானது. தனிமனித இடைவெளியை பின்பற்ற இயலாத சூழலில் முக கவசம் கட்டாயம் அணிதல் வேண்டும். அமெரிக்கா, இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்தில் முக கவசம் அணிவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags :