Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடுமையாக இருந்த தனிமைப்படுத்தல் விதிகளை தளர்வுபடுத்தியது இங்கிலாந்து

கடுமையாக இருந்த தனிமைப்படுத்தல் விதிகளை தளர்வுபடுத்தியது இங்கிலாந்து

By: Nagaraj Tue, 19 May 2020 2:11:19 PM

கடுமையாக இருந்த தனிமைப்படுத்தல் விதிகளை தளர்வுபடுத்தியது இங்கிலாந்து

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற உத்தரவிட்டது இங்கிலாந்து அரசு. தற்போது இந்த விதிமுறைகளை சற்றே தளர்த்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் கோடைகாலங்களில் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா செல்வது நடைமுறையில் இருந்து வரும் வழக்கம். தற்போது கோடைகாலம் ஆரம்பமாகியுள்ளதால் பலரும் பிரான்சுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவல், தனிமைப்படுத்தல் போன்றவற்றால் பிரான்ஸிற்கு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதற்கிடையில் பொருளாதார சிக்கல்களை தவிர்க்கும் விதமாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையே பொருள் போக்குவரத்தை தடையின்றி மேற்கொள்ள புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன.

uk,france,relaxation,isolation,practice ,இங்கிலாந்து, பிரான்ஸ், தளர்வுகள், தனிமைப்படுத்தல், நடைமுறை

இதனால் இரு நாடுகளுக்கு பொருள் போக்குவரத்தை மேற்கொள்ளும் சாரதிகள் இனி 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறையில் மாற்றம் கொண்டு வருவது குறித்தும் இரு நாடுகளும் ஆலோசனையில் இறங்கி உள்ளன. ஆனால் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடைமுறை 3 வாரங்களுக்கு ஒரு முறை சீராய்வுக்கு உள்படுத்தப்பட்டு புதிய விதிகள் அமுல்படுத்தப்படும் என இங்கிலாந்து பிரதமர் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|