Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோதுமை மாவு ஏற்றுமதி .. கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

கோதுமை மாவு ஏற்றுமதி .. கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

By: vaithegi Fri, 26 Aug 2022 08:40:42 AM

கோதுமை மாவு ஏற்றுமதி  ..   கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

புதுடெல்லி: ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை மிக கடுமையாக உயர்ந்தது. எனவே இதனால் உள்நாட்டு சந்தையில் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை ஒன்றை விதித்துள்ளது.

இதனை அடுத்து இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமைக்கான தேவை அதிகரித்ததால், இந்தியாவின் கோதுமை மாவு ஏற்றுமதி 200 சதவீதம் உயர்ந்தது.

central cabinet,wheat flour ,மத்திய அமைச்சரவை,கோதுமை மாவு

மேலும் உள்நாட்டு சந்தையில் கோதுமை மாவு விலையும் மிக கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கோதுமை மாவு ஏற்றுமதிக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

எனவே இதன் மூலம் நல்லிவடைந்த சமூகத்தினருக்கு உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags :