Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

By: vaithegi Thu, 19 Oct 2023 1:38:36 PM

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

இந்தியா: மத்திய அமைச்சரவை ஒப்புதல் ... மத்திய அரசு விவசாயிகளுக்காக பல கடன் வசதி, பயிர் காப்பீடு திட்டம் என ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டு வருகிறது. இந்நிலையில், தற்போது 2024-25 சந்தைப் பருவத்தில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவைக் குழு நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதாவது, மைசூர் பயறு வகைகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.425 ஆகவும், ராப்சீட் மற்றும் கடுகுக்கு குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.200 ஆகவும் அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

union cabinet,crops ,மத்திய அமைச்சரவை,பயிர்கள்

இதனை அடுத்து கோதுமை மற்றும் குங்குமப்பூவுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.150 ஆகவும், பார்லிக்கு ரூ.115 மற்றும் கடலைக்கு ரூ.105 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும்,இது போக, விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் ராப்சீட் மற்றும் கடுகுக்கு 98%, பருப்பு 89%, உளுந்து 60 %, பார்லி 60%, குங்குமப்பூ 52% ஆக விலை உயர்த்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

Tags :