Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுங்க கட்டணத்தில் சலுகை வழங்க உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவிப்பு

சுங்க கட்டணத்தில் சலுகை வழங்க உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவிப்பு

By: vaithegi Thu, 28 July 2022 10:51:02 AM

சுங்க கட்டணத்தில் சலுகை வழங்க உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவிப்பு

இந்தியா: நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி சுங்க கட்டண வரியாகும். இன்றைய சூழலில் மக்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போடுவதே மிக சிரமமாக உள்ள நிலையில் தற்போது அதிகரித்து வசூலிக்கப்படும் இந்த சுங்க கட்டணம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இச்சுங்க கட்டணம் விதிப்பதால் நாட்டில் உள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்யும் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் சலுகை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

union govt.,customs fee,exemption ,ஒன்றிய அரசு ,சுங்க கட்டணம்,சலுகை

தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிமுறைகள் 2009 ன் படி தேசிய நெடுஞ்சாலை, நிரந்தர பாலம், புறவழிச்சாலை அல்லது சுரங்கப்பாதை போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தும் வர்த்தகம் இல்லா வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கு சுங்க சாவடிகளில் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் மாதாந்திர பயண அட்டை பெறும் நாளிலிருந்து 1 மாதத்திற்கு அதிகபட்சமாக 50 முறை அந்த சாலையை பயன்படுத்துபவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் இந்த கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில் இக்கட்டணம் ரூ.315 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது சுங்கச்சாவடிகளில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கும் வர்த்தகம் இல்லா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளருக்கு இந்த சலுகை அளிக்கப்படுவதாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :