சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்த மத்திய அமைச்சர்
By: Nagaraj Sun, 02 Oct 2022 11:56:53 AM
புதுடில்லி: சர்ச்சை பேச்சுக்கு விளக்கம்... தன்னுடைய பேச்சு சர்ச்சைக்குள்ளானது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரு அரசு விழாவில் பேசுகையில், ‘ நாட்டில், பட்டினி, வேலையின்மை, தீண்டாமை இருக்கிறது.’ என்று பேசியிருந்தார்.
அவர் மேலும் பேசுகையில், ‘ மக்களிடம் பணவீக்கம், சாதி பாகுபாடு
இருக்கிறது. நம் நாட்டில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் அடிப்படை வசதி கூட
இல்லை. அதனால் பெரும்பாலான மக்கள் நகரத்தின் பக்கம் வருகின்றனர்.’
என்றும்
அவர் பேசியதாக கருத்துக்கள் வெளியாகி இருந்தன. ஒரு மத்திய அமைச்சர் இந்த
மாதிரியான கருத்துக்கள் கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
சர்ச்சைக்குள்ளானது. பின்னர் இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் நிதின்
கட்காரி, நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறது என நான் பேசிய கருத்துக்கள்
தவறாக இங்கு புரிந்துகொள்ளப்பட்டது என விளக்கம் அளித்துள்ளார்.