Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கருத்து தெரிவிக்க முடியாது என்று அதிரடித்த மத்திய அமைச்சர்

கருத்து தெரிவிக்க முடியாது என்று அதிரடித்த மத்திய அமைச்சர்

By: Nagaraj Thu, 09 Feb 2023 08:54:55 AM

கருத்து தெரிவிக்க முடியாது என்று அதிரடித்த மத்திய அமைச்சர்

புதுடெல்லி: கருத்து தெரிவிக்க முடியாது... ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான மசோதா தமிழக ஆளுநரிடம் நிலுவையில் இருப்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்வியில், “ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான மசோதாவுக்கு தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

central minister,online game,tamilnadu, ,ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், ஆளுநர், மசோதா

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தமிழகத்தில் இதுவரை 40 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்று கேட்டிருந்தார்.

அதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில், “ஒரு மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட பிரச்னை குறித்து இங்கு பதில் அளிக்க முடியாது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான மசோதாவை 19 மாநிலங்கள் கொண்டு வந்துள்ளன. அனைத்து மாநிலங்களும் முன்வந்தால் அரசு தேசிய அளவில் மசோதா கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

எனவே, தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டது குறித்து கருத்து கூற முடியாது” என்று அமைச்சர் பதிலளித்தார்.

Tags :