Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நியூயார்க் டைம்ஸ் செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர்

நியூயார்க் டைம்ஸ் செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர்

By: Nagaraj Sat, 11 Mar 2023 10:33:09 AM

நியூயார்க் டைம்ஸ் செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர்

புதுடில்லி: மத்திய அமைச்சர் கண்டனம்... காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறித்த நியூயார்க் டைம்ஸ் செய்திக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல ஊடகமான நியூயார்க் டைம்ஸ் சமீபத்தில் காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறித்து ஒரு கட்டுரை எழுதியது. காஷ்மீரில் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், செய்திகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

anurag tagore,central ministers,new york, ,அனுராக் தாக்கூர், நியூயார்க் டைம்ஸ், மத்திய அமைச்சர்

இந்த செய்திக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் ஏற்கனவே இந்தியாவைப் பற்றி செய்திகளை வெளியிடும் போது நடுநிலையாக இருப்பதை நிறுத்திவிட்டதாகவும், காஷ்மீர் பற்றி தவறான செய்திகள் மற்றும் புனையப்பட்ட செய்திகளை வெளியிடுவது மட்டுமல்லாமல், இந்தியாவின் ஜனநாயக அமைப்பு குறித்து தவறான பிரச்சாரத்தை பரப்புவதாகவும் அவர் கூறினார்.

இந்த போலி செய்திகள் நீண்ட காலம் தொடர முடியாது என்றும், இந்தியா மீது வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் சில வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் நமது பிரதமர் இந்திய ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை குறித்து போலியான செய்திகளை பரப்ப முயற்சிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

Tags :