Advertisement

ஆப்கனில் உள்ள 5 இராணுவதளங்களை மூடியது அமெரிக்கா

By: Nagaraj Wed, 15 July 2020 4:02:36 PM

ஆப்கனில் உள்ள 5 இராணுவதளங்களை மூடியது அமெரிக்கா

அமெரிக்கா அறிவிப்பு... ஆப்கானிஸ்தானிலுள்ள ஐந்து இராணுவத்தளங்களை மூடியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

பென்டகனின் முக்கிய அதிகாரி ஒருவர் நேற்று (செவ்வாய்கிழமை) இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹெல்மண்ட், உருஸ்கான், பக்திகா மற்றும் லக்மன் ஆகிய மாகாணங்களில் உள்ள இராணுவத் தளங்களையே அமெரிக்கா இவ்வாறு மூடியுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்னர் தலிபானியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பகுதியாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

afghanistan,nata,troops,number,closed ,
ஆப்கானிஸ்தான், நேட்டா, படைவீரர்கள், எண்ணிக்கை, மூடப்பட்டன

2001ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இடம்பெற்று வரும் மிக நீண்ட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு இரு தரப்புகளுக்குமிடையே ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி மாதம் கைச்சாத்திடப்பட்டது. கட்டாரில் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அமெரிக்க அதிகாரிகளும் தலிபான் பிரதிநிதிகளும் இந்த ஒப்பந்தத்தில் பெப்ரவரி 29 ஆம் திகதி கையெழுத்திட்டனர்.

குறித்த ஒப்பந்தத்தில், 135 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வீரர்கள் எண்ணிக்கை 8,600 ஆக குறைக்கப்படும், 14 மாதங்களில் நேட்டோ படை வீரர்கள் முழுமையாக ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கி கொள்ளப்படுவர் என்பது உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|