Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹார்முஸ் ஜலசந்தி அருகே எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் கைப்பற்றியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

ஹார்முஸ் ஜலசந்தி அருகே எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் கைப்பற்றியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

By: Karunakaran Fri, 14 Aug 2020 10:47:18 AM

ஹார்முஸ் ஜலசந்தி அருகே எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் கைப்பற்றியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா திடீரென விலகியது. இதன் காரணமாக இருநாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாரசீக வளைகுடா பகுதியில் செல்கிற கப்பல்களை ஈரான் இலக்காக கொண்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஹார்முஸ் ஜலசந்தி அருகே லைபீரியா கொடியேந்தி எம்.வி.விலா என்ற எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் ஒரு ஹெலிகாப்டரில் வந்து கைப்பற்றியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும், 5 மணி நேரம் தங்கள் பிடியில் வைத்திருந்து விட்டு விடுவித்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

united states,iranian navy,oil tanker,strait of hormuz ,யுனைடெட் ஸ்டேட்ஸ், ஈரானிய கடற்படை, எண்ணெய் டேங்கர், ஹார்முஸ் ஜலசந்தி

இருப்பினும், அந்த எண்ணெய் கப்பலில் இருந்து எந்த ஒரு துயர அழைப்பும் வரவில்லை என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனாலும், எண்ணெய் கப்பலை எதற்காக ஈரான் கைப்பற்றியது என்பது குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஹார்முஸ் ஜலசந்தி அருகே எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் கைப்பற்றியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தி உள்ளதால், ஈரான், அமெரிக்கா இடையே மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியபின், ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :