Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரான்ஸ், இங்கிலாந்திலிருந்து கொரோனா தடுப்பூசியில் 10 கோடி டோஸ் வாங்க அமெரிக்கா ஒப்பந்தம்

பிரான்ஸ், இங்கிலாந்திலிருந்து கொரோனா தடுப்பூசியில் 10 கோடி டோஸ் வாங்க அமெரிக்கா ஒப்பந்தம்

By: Karunakaran Mon, 03 Aug 2020 10:13:10 AM

பிரான்ஸ், இங்கிலாந்திலிருந்து கொரோனா தடுப்பூசியில் 10 கோடி டோஸ் வாங்க அமெரிக்கா ஒப்பந்தம்

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை விரைவில் 50 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது.

பல்வேறு நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டறிய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி வாங்குவதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கையும் 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனா காரணமாக அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர்.

united states,100 million doses,corona vaccine,france ,அமெரிக்கா, 100 மில்லியன் டோஸ், கொரோனா தடுப்பூசி, பிரான்ஸ்

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சனோபி, கிளாக்சோஸ்மித்கிளைன் ஆகிய மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியில் 10 கோடி ‘டோஸ்’ கொள்முதல் செய்ய அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் மாகாணமான கலிபோர்னியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த 7 நாட்களில் மட்டும் கலிபோர்னியா மாகாணத்தில் 1 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 219 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் கலிபோர்னியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது.

Tags :