Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈராக்கில் இருந்து 2 ஆயிரத்து 200 வீரர்களை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு

ஈராக்கில் இருந்து 2 ஆயிரத்து 200 வீரர்களை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு

By: Karunakaran Thu, 10 Sept 2020 1:42:45 PM

ஈராக்கில் இருந்து 2 ஆயிரத்து 200 வீரர்களை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு

ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகளின் படைத்தளங்கள் அமைந்துள்ளன. ஈரான் நாட்டின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த படைகள் ஈராக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஈராக்கில் உள்ள நோட்டோ படை வீரர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 500 ஆகும். இதில் 5 ஆயிரத்து 200 பேர் அமெரிக்க வீரர்கள் ஆவர்.

தற்போது ஈராக்கில் இருந்து தங்கள் நாட்டை சேர்ந்த படைவீரர்கள் 2 ஆயிரம் 200 பேரை திரும்பபெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த படைக்குறைப்பு நடவடிக்கை இம்மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையிடமான பென்டகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

united states,2200 troops,iraq,is terrorist ,அமெரிக்கா, 2200 துருப்புக்கள், ஈராக், ஐ.எஸ் பயங்கரவாதி

இதுகுறித்து அமெரிக்க ராணுவத்தின் மத்திய கமெண்டர் ஜெனரல் கெனித் மெக்கன்சி கூறுகையில், ஈராக் பாதுகாப்பு படையினரின் திறனை கருத்தில் கொண்டு தங்கள் படையினர் 2 ஆயிரத்து 200 பேரை திருப்பப்பெறுவதாக கூறியுள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம் ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 3 ஆயிரமாக குறைகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற வெளிநாடுகளில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க வீரர்களை சொந்த நாட்டிற்கு திரும்பக்கொண்டுவரும் நடைமுறை அதிகரித்துள்ளது. அங்கு நடைபெறும் உள்நாட்டு போரில் அரசுக்கு ஆதரவாக இந்த அமெரிக்க வீரர்கள் போரிட்டு வருகின்றனர்.

Tags :
|