Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொருளாதார தடை விதிக்க அமெரிக்காவுக்கு சட்ட அதிகாரம் இல்லை

பொருளாதார தடை விதிக்க அமெரிக்காவுக்கு சட்ட அதிகாரம் இல்லை

By: Nagaraj Mon, 21 Sept 2020 4:53:14 PM

பொருளாதார தடை விதிக்க அமெரிக்காவுக்கு சட்ட அதிகாரம் இல்லை

ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்காவுக்கு சட்ட அதிகாரம் இல்லை என்று ஐநா பாதுகாப்பு குழு நிரந்தர உறுப்பினர்களான பிரான்ஸ், பிரிட்டன் நாடுகள் தெரிவித்துள்ளன.

ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை 2015ஆம் ஆண்டில் விலக்கிக் கொள்ளப்பட்டது. பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஈரான் ஒப்பந்தம் ஏற்படுத்தியதை தொடர்ந்து இந்த தடை ரத்து செய்யப்பட்டது. அப்போது பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியில் இருந்தார்.

இதைத்தொடர்ந்து 2018ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வாபஸ் பெற்றது. பாரக் ஒபாமா சரியாக பேச்சுவார்த்தை இல்லை என்று கூறி ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென ட்ரம்ப் கூறி வருகிறார்.

தற்போது ஈரான் - அமெரிக்கா இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளதால் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அரசு கூறி வருகிறது. இந்நிலையில், ஈரான் மீது தடை விதிக்க அமெரிக்காவுக்கு அதிகாரமில்லை என்று கூறி ஐநா பாதுகாப்புக் குழுவின் முன்னணி உறுப்பினர்களாக பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

france,britain,germany,russia,un council,iran ,பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா, ஐ.நா. சபை, ஈரான்

அமெரிக்கா கூறி வரும் ஈரான் மீதான பொருளாதார தடை சட்டரீதியாக அமலுக்கு வர முடியாது என்று ஐநா பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பினர்களான பிரான்ஸ், பிரிட்டன், நிரந்தரமல்லா உறுப்பினரான ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

மேலும், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்காவுக்கு சட்ட அதிகாரம் இல்லை என்று ஐநா பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பினரான ரஷ்யாவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைந்துள்ளதாகவும், அமெரிக்கா தனித்து விடப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது

Tags :
|
|