Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செவ்வாய் கிரகத்தை நோக்கிய சரியான பாதைக்கு அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் திருப்பி விடப்பட்டது

செவ்வாய் கிரகத்தை நோக்கிய சரியான பாதைக்கு அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் திருப்பி விடப்பட்டது

By: Karunakaran Tue, 18 Aug 2020 3:43:43 PM

செவ்வாய் கிரகத்தை நோக்கிய சரியான பாதைக்கு அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் திருப்பி விடப்பட்டது

முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டு வரும் ‘ஹோப்’ விண்கலம் 1,500 கிலோ எடை உள்ளது. இதில் 3 சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து விண்வெளியில் 1,800 வாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும். இதன் மூலம் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு 1000 ஜிகாபைட் தகவல்களை அனுப்ப முடியும்.

இதில் ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கக்கூடிய ‘டெல்டா-5’ என்ற திரஸ்டர் என்ஜின் உள்ளது.இதற்காக 800 கிலோ ஹைட்ரஜன் எரிபொருள் உள்ளே நிரப்பப்பட்டுள்ளது. செவ்வாய் கிரக பாதையை அடைய தேவையான உந்து சக்தியை இந்த என்ஜின் தருகிறது. ‘டெல்டா-5’ என்ற என்ஜினில் 6 திரஸ்டர்கள் எனப்படும் உந்து சக்தி அமைப்பு உள்ளது.

emirates,hope spacecraft,orrect orbit,mars ,அமீரகம், ஹோப் விண்கலம், சரியான சுற்றுப்பாதை, செவ்வாய்

கடந்த ஜூலை 20-ந் தேதி ஜப்பான் நாட்டில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஹோப் விண்கலம் புவிவட்டப்பாதையில் இருந்து விலகி விண்வெளியில் பல லட்சம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் பயணம் செய்து வருகிறது. இதனை துபாய் விண்வெளி கட்டுப்பாட்டு மையம் இயக்கி வருகிறது. இந்நிலையில் விண்வெளியில் இருந்து செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் திருப்பி விடுவதற்காக டெல்டா திரஸ்டர் என்ஜின் முதல் முறையாக இயக்கப்பட்டது.

6 திரஸ்டர் என்ஜின்கள் இயக்கப்பட்டவுடன், கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து கொடுக்கப்பட்ட கட்டளைகளை ஏற்று ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கிய சரியான பாதைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. முதல் முயற்சியிலேயே தவறுகள் ஏதும் இல்லாமல் மிகச்சரியாக ஹோப் விண்கலத்தின் பாதை சரிசெய்யப்பட்டுள்ளதாக முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :