Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்; ஈரான் அதிபர் வலியுறுத்தல்

பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்; ஈரான் அதிபர் வலியுறுத்தல்

By: Nagaraj Tue, 28 July 2020 7:53:59 PM

பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்; ஈரான் அதிபர் வலியுறுத்தல்

அமெரிக்காவுக்கு வலியுறுத்தல்... ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என, ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதச் சோதனை தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்து வருகிறது. 'சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம்' என, அமெரிக்கா குற்றம் சாட்டியது. இப்படி, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

ஈரான் மீதும் அதன் முக்கியத் தலைவர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடையை டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானின் பொருளாதாரம் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால், ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் ஆட்சிக்கு எதிராக, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

sanctions,to be lifted,iran,exports ,பொருளாதார தடை, நீக்க வேண்டும், ஈரான், ஏற்றுமதி

மக்கள் போராட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார். இந்நிலையில், ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி எஃகு மற்றும் வேதியியல் தொழிற்சாலைகள் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியதாவது:

வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, சந்தைகளைக் கைப்பற்றுதல் என, உலகில் உயர்ந்த நிலையை அடைவதற்கு அடிப்படையானது உற்பத்தி தான். இதனால், அனைத்துத் தயாரிப்புகளும் மிகவும் மதிப்புமிக்கவையாகப் பார்க்கப்பட வேண்டும். ஏற்றுமதியில், எண்ணெயைத் தவிர்த்து கெமிக்கல் மற்றும் எஃகு தொழிற்சாலைகளும் ஏற்றுமதியில் பெரும் சுமையைச் சுமக்கின்றன.

அவை அந்நியச் செலாவணிகளைப் பூர்த்தி செய்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கின்றன. ஆனால், பொருளாதாரத் தடை ஈரான் மீது அழுத்தத்தைச் செலுத்துகின்றது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|