Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதியவர்களுக்கு தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் வெளியீடு

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதியவர்களுக்கு தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் வெளியீடு

By: vaithegi Thu, 25 Aug 2022 8:17:13 PM

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதியவர்களுக்கு தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம்  வெளியீடு

சென்னை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைன் முறையில் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 16ம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதை அடுத்து இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க 1.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 20ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதே போன்று பொது மற்றும் தொழிற்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ம் தேதி முதல் அக்டோபர் 23ம் தேதி வரை 4 சுற்றுகளாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதனால் பொறியியல் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் மீதம் இருப்பதை தவிர்க்கும் வகையில் அந்த காலியிடம் 2ம்‌ கட்ட கலந்தாய்வின்போது நிரப்‌பப்படும்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகம் முழுவதும் மொத்தமாக 110 TFC மையங்களில் கலந்தாய்வு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

university,semester exam ,பல்கலைக்கழகம்  ,செமஸ்டர் தேர்வு

இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வு எழுதிய பொறியியல் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தனர். இதையடுத்து தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி அண்ணா பல்கலையின்‌ இணைப்பில்‌ உள்ள இன்‌ஜினியரிங்‌ கல்லூரிகளில்‌, பி.இ., பி.டெக்‌., படிக்‌கும்‌ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் https://coe1.annauniv.edu/home/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தங்களின் தேர்வு முடிவுகளில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தங்களின் விடைத்தாள்களை அதற்கு உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதற்கு வருகிற 29ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. இதையடுத்து மறுமதிப்பீடுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனகூறப்பட்டுள்ளது.

Tags :