Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரே வாட்ஸ்அப் செயலியின் மூலமாகவே ஒன்றிற்கும் மேற்பட்ட அக்கவுண்டை லாகின் செய்து கொள்ளும்படியான அப்டேட் வெளியீடு

ஒரே வாட்ஸ்அப் செயலியின் மூலமாகவே ஒன்றிற்கும் மேற்பட்ட அக்கவுண்டை லாகின் செய்து கொள்ளும்படியான அப்டேட் வெளியீடு

By: vaithegi Fri, 18 Aug 2023 4:55:43 PM

ஒரே வாட்ஸ்அப் செயலியின் மூலமாகவே ஒன்றிற்கும் மேற்பட்ட அக்கவுண்டை லாகின் செய்து கொள்ளும்படியான அப்டேட் வெளியீடு

இந்தியா: whatsapp நிறுவனம் ஒவ்வொரு நாளும் பயனர்களுக்கு கூடுதலான வசதியினை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் புதிய அப்டேட்டை அவ்வப்போது வெளியிட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில், இ – மெயில் மூலமாக whatsapp லாகின் செய்யும் வசதி, தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்பை mute செய்யும் வசதி,

இதையடுத்து வீடியோ கால் மூலமாகவே ஸ்கிரீன் ஷேர் செய்யும் வசதி, AI தொழில்நுட்பத்தின் மூலமாக ஸ்டிக்கர்களை வடிவமைக்கும் வசதி என்று ஏகப்பட்ட அப்டேட்டுகளை whatsapp நிறுவனம் அடுத்தடுத்து வெளியிட்ட படிவுள்ளது.

update,whatsapp,account ,அப்டேட் ,வாட்ஸ்அப்,அக்கவுண்ட்


தற்போது வரையிலும் ஒரு மொபைலில் Duel whatsapp என்னும் வசதியின் மூலமாக மட்டுமே இரண்டு வாட்ஸ்அப்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 1 whatsapp செயலியிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்ட்டை லாகின் செய்து கொள்ளும்படியான அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த அப்டேட் தற்போது பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளதாகவும், ஓரிரு வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அப்டேட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|