Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய என்ஜினியரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க பாகிஸ்தான் எடுத்த முயற்சியை தடுத்தது அமெரிக்கா

இந்திய என்ஜினியரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க பாகிஸ்தான் எடுத்த முயற்சியை தடுத்தது அமெரிக்கா

By: Nagaraj Tue, 23 June 2020 11:28:50 AM

இந்திய என்ஜினியரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க பாகிஸ்தான் எடுத்த முயற்சியை தடுத்தது அமெரிக்கா

பாகிஸ்தான் எடுத்த முயற்சியை தடுத்தது அமெரிக்கா... ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியரான கட்டுமான என்ஜினியர் வேணு மாதவ் டோங்கராவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க பாகிஸ்தான் எடுத்த முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது.

எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலில் இந்தியாவில் நடத்தி வந்த ஜெய்ஷ்-இ-முகமது (ஜே.எம்) தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா பாதுகாப்பு அவை அறிவித்தது. இதற்கு பதிலடியாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகளை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு இந்திய கட்டுமான நிறுவனத்தின் பொறியியலாளர் வேணு மாதவ் டோங்காரா, பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்பு கொண்டிருந்த 4 இந்திய நாட்டினரில் ஒருவர் என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது. இந்த டோங்காராவை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க. சீனாவின் ஆதரவோடு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முயன்றது.

pakistan,us,blocked,engineer,indian ,பாகிஸ்தான், அமெரிக்கா, தடுத்தது, என்ஜினியர், இந்தியர்

இதை அமெரிக்கா தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரப்பூர்வமாக தடுத்து நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் யு.என்.எஸ்.சி 1267 பொருளாதாரத் தடைக் குழுவால் டோங்காராவை சர்வதேச தீவிரவாதியாக தடைசெய்யும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்கா இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தி வைத்திருந்தது. இருப்பினும் மீண்டும் பாகிஸ்தான் இந்த முயற்சியில் இறங்கியது. அமெரிக்கா கடந்த வாரம் இந்த திட்டத்தை தடுத்ததால், பாகிஸ்தானின் முயற்சி முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் டோங்காராவை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க மீண்டும், மீண்டும் பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொள்ளும் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|