Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவுக்கு முட்டுக்கட்டு போட புது சட்ட மசோதாவை தாக்கல் செய்தது அமெரிக்கா

சீனாவுக்கு முட்டுக்கட்டு போட புது சட்ட மசோதாவை தாக்கல் செய்தது அமெரிக்கா

By: Monisha Sat, 23 May 2020 5:25:12 PM

சீனாவுக்கு முட்டுக்கட்டு போட புது சட்ட மசோதாவை தாக்கல் செய்தது அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் விவகாரத்தில் கடும் மோதல் போக்கு அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவி வருகிறது. அமெரிக்காவில் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை சின்னாபின்னமாக்கி விட்ட சீனாவை சும்மா விடக்கூடாது என்ற மன நிலை, அந்த நாட்டு அரசியல்வாதிகளிடம் மேலோங்கி வருகிறது. சீனாவுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகத்துக்கு ஆளும் குடியரசு கட்சி எம்.பி.க்களே அழுத்தம் தந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் குடியரசு கட்சி செனட் சபை எம்.பி.க்களான டெட் குரூஸ், ரிக் ஸ்காட், மைக் பிரான், மார்ஷா பிளாக்பர்ன், ஜோனி எர்னஸ்ட், மார்த்தா மெக்சல்லி, டாம் காட்டன் ஆகியோர் செனட் சபையில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்தனர்.

china,bill,us,corona virus,president trump ,சீனா,சட்ட மசோதா,அமெரிக்கா,கொரோனா வைரஸ்,அதிபர் டிரம்ப்

இந்த மசோதா சீனாவுக்கு முட்டுக்கட்டு போடும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசி தொழில் நுட்பத்தை சீனா திருட முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியை திருடுவதையும், சேதப்படுத்துவதையும் தடுக்கிற வகையில் இந்த மசோதாவை செனட் சபையில் குடியரசு கட்சியின் மூத்த எம்.பி.க்கள் தாக்கல் செய்து பேசினார்கள்.

இதற்கிடையே இந்த விவகாரம் பற்றி ஆப்பிரிக்க, அமெரிக்க தலைவர்கள் மத்தியில் டிரம்ப் பேசினார். அப்போது அவர், “உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் வந்தது. இதை அமெரிக்கா லேசாக எடுத்துக்கொள்ளாது. நாங்கள் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தோம். ஆனால் அந்த மை உலர்வதற்குள், இந்த கொரோனா வைரஸ் தொற்று வெடித்துள்ளது. இதை நாங்கள் சாதாரணமாக விட்டுவிடப்போவது இல்லை” என்று குறிப்பிட்டார்.

Tags :
|
|
|