Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜி20 மாநாட்டிற்கு சீன அதிபர் வராததால் அமெரிக்க அதிபர் ஏமாற்றம்

ஜி20 மாநாட்டிற்கு சீன அதிபர் வராததால் அமெரிக்க அதிபர் ஏமாற்றம்

By: Nagaraj Tue, 05 Sept 2023 07:06:18 AM

ஜி20 மாநாட்டிற்கு சீன அதிபர் வராததால் அமெரிக்க அதிபர் ஏமாற்றம்

நியூயார்க்: ஜி20 மாநாட்டிற்கு சீன அதிபர் ஜின்பிங் வராததால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏமாற்றம்டைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலக பொருளாதாரத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்க கூடிய பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண அமைக்கப்பட்டது உலகின் 19 நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பு. இக்கூட்டமைப்பு, முதல் முறையாக 2008-ல் அமெரிக்காவின் வாஷிங்டனில் சந்தித்தது.

தற்போது வரும் 9, 10 ஆகிய தேதிகளில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் இதன் அடுத்த உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை தருகிறார். ஆனால், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் புதினுக்கு பதிலாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் பங்கேற்பார் எனவும் ரஷியா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

disappointed,chinese president,g20 summit,new delhi,not present ,ஏமாற்றம் அடைந்துள்ளேன், சீன அதிபர், ஜி20 மாநாடு, புதுடில்லி, வரவில்லை

சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே, ரஷிய-உக்ரைன் போர் குறித்த மாறுபட்ட நிலைப்பாடுகள் காரணமாகவும், இரு நாட்டு பொருளாதார உறவில் எழுந்துள்ள பல்வேறு சிக்கல்கள் காரணாமாகவும், சமீப காலமாக இரு நாடுகளுக்கும் இடையே உறவு சுமூகமாக இல்லை.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டு அதிபர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் போது சந்தித்து கொள்வார்கள் என்றும் அப்போது அவர்கள் இருவருக்கும் இடையிலான சிக்கல்களை தணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்கலாம் எனவும் நம்பப்பட்டது.

ரஷிய அதிபர் புதினை போல சீன அதிபரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக சீனா அறிவித்திருக்கிறது. சீன அதிபருக்கு பதிலாக அந்நாட்டு தூதர் லி கியாங் வருகை தருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள ரெகோபோத் கடற்கரையில் ஜோ பைடனுக்கு சொந்தமான 2 வீடுகள் உள்ளன. தற்போது அங்கு சென்றிருக்கும் அவரிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் தெரிவித்ததாவது:

சீன அதிபர் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை எனும் அறிவிப்பால் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனாலும், அவரை நான் விரைவில் சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :