Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா விவகாரத்தில் மீண்டும், மீண்டும் சீனா மீது குற்றச்சாட்டு வைக்கும் அமெரிக்க அதிபர்

கொரோனா விவகாரத்தில் மீண்டும், மீண்டும் சீனா மீது குற்றச்சாட்டு வைக்கும் அமெரிக்க அதிபர்

By: Nagaraj Sat, 23 May 2020 1:41:14 PM

கொரோனா விவகாரத்தில் மீண்டும், மீண்டும் சீனா மீது குற்றச்சாட்டு வைக்கும் அமெரிக்க அதிபர்

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான், அமெரிக்காவுக்கு பரவியது. இந்த விஷயத்தில், சீனாவை எளிதில் விட்டு விடமாட்டோம் என அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

'கொரோனா வைரஸ் உலகம் முழுவதற்கும் பரவ சீனா தான் காரணம்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதுகுறித்து அவர் மீண்டும் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து தான், அமெரிக்காவுக்கு பரவியது. இந்த விஷயத்தில் எங்கள் அதிருப்தியை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். மீண்டும் அதை பதிவு செய்ய விரும்புகிறோம்; இதை, அவ்வளவு எளிதாக விட்டு விட மாட்டோம். சீனாவுக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுப்போம்.

president trump,deal,china,corona,legal ,அதிபர் டிரம்ப், ஒப்பந்தம், சீனா, கொரோனா, சட்டரீதி


'அமெரிக்காவில் கடுமையான கட்டுப்பாடுகளை தொடர்ந்திருந்தால், வைரஸ் பாதிப்பை குறைந்திருக்கலாம்' என, சிலர் கூறியுள்ளனர்.
இவர்களை விஞ்ஞானிகளாக பார்க்க முடியாது. டிரம்பின் அரசியல் எதிரிகளாகவே பார்க்கிறேன். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட, 30 நாடுகளுக்கு இடையே, வான் சேவை ஒப்பந்தம், 2002ல் கையெழுத்தானது.

இதன்படி, இந்த 30 நாடுகளும், தங்களுக்கு இடையே பரஸ்பரம் நம்பிக்கையை மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் விதமாக, தங்கள் பகுதிகளுக்குள் ஆயுதங்கள் ஏந்தாத கண்காணிப்பு விமானங்களை இயக்கலாம். ஆனால், ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை அடிக்கடி மீறி வருகிறது. எனவே, இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags :
|
|
|