Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 7 ஆண்டுகளில் மின் கார்கள் பயன்பாடு 10 சதவீதம் அதிகரிக்குமாம்

அடுத்த 7 ஆண்டுகளில் மின் கார்கள் பயன்பாடு 10 சதவீதம் அதிகரிக்குமாம்

By: Nagaraj Thu, 26 Oct 2023 07:28:56 AM

அடுத்த 7 ஆண்டுகளில் மின் கார்கள் பயன்பாடு 10 சதவீதம் அதிகரிக்குமாம்

நியூயார்க்: 2030-ல் மின்சார கார்கள் பயன்பாடு உலகில் 10 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் காற்றாலை மின்சாரம் தயாரிப்பதில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் மின்சார கார்கள் பயன்பாடு உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரிக்கும் என்று சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.

countries of the world,wind,power generation,3 times increase,investments ,உலக நாடுகள், காற்றாலை, மின் உற்பத்தி, 3 மடங்கு உயரும், முதலீடுகள்

உலகலாவிய ஆற்றல் வெளிப்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கை விவரங்களை சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச எரிசக்தி முகமை, உலகளாவிய மின் பயன்பாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு 2030ஆம் ஆண்டில் 50 சதவீதமாக உயரும் என்றும் தெரிவித்துள்ளது.

அப்போது கடல் சார்ந்த காற்றாலை மின் உற்பத்தியில் செய்யப்படும் முதலீடுகள் 3 மடங்கு உயரும் என்று கூறியுள்ளது. அதே நேரத்தில் புவி வெப்பமடைதலை 1 புள்ளி 5 டிகிரிக்கு கட்டுப்படுத்துவது என்பது உலக நாடுகளின் கூடுதல் முயற்சிகள் மூலமே சாத்தியம் என்றும் தெரிவித்துள்ளது

Tags :
|