Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையின் அளவு இந்தாண்டு குறைவாக பதிவு

ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையின் அளவு இந்தாண்டு குறைவாக பதிவு

By: vaithegi Fri, 01 Sept 2023 09:30:46 AM

ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையின் அளவு இந்தாண்டு குறைவாக பதிவு

சென்னை:ஆகஸ்ட் மாதத்தில் 30%க்கும் மேல் குறைவாக மழை, இந்த நூற்றாண்டில் இதுவே முதல் முறை ... தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

august,heavy rain,meteorological center ,ஆகஸ்ட் ,கனமழை, வானிலை மையம்

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 1901ம் ஆண்டுக்கு பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையின் அளவு இந்த ஆண்டு 36% குறைவாக பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இதையடுத்து இந்த நூற்றாண்டில், ஆகஸ்ட் மாதத்தில் 30%க்கும் மேல் குறைவாக மழை பெய்திருப்பது இதுவே முதல் முறை; எல்-நினோ எனப்படும் காலநிலை நிகழ்வு, இந்த பருவநிலை மாற்றத்துக்கு காரணம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Tags :
|