Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பழனியில் தியேட்டர் அதிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர் பலி

பழனியில் தியேட்டர் அதிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர் பலி

By: Nagaraj Tue, 17 Nov 2020 6:56:30 PM

பழனியில் தியேட்டர் அதிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர் பலி

பழனியில் தியேட்டர் அதிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலத்தகாயமடைந்தவர் இறந்து விட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அக்கரைப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் (60). விவசாயி. பழனி ரெயில்வே பீடர் ரோடு, அப்பர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (80). இவர் திரையரங்க உரிமையாளர் ஆவார்.

இவர்களுக்கிடையே பழனி பீடர் ரோட்டில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அப்படியிருக்க அந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான வேலைகளில் இளங்கோவன் இறங்கினார் . இதையடுத்து நேற்று காலை 10.15 மணி அளவில் நிலத்தை தூய்மைப்படுத்தும் பணியில் இளங்கோவனின் உறவினர்களான பழனிசாமி (72), சுப்பிரமணி (57) உள்ளிட்டோர் செயல்பட்டிருந்தனர்.

இந்த விஷயம் அறிந்த நடராஜன் அங்கு சென்று தகராறு பண்ணியிருக்கிறார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுப்பிரமணியனையும், பழனிசாமியையும் அடுத்தடுத்து சுட்டார்.

theater principal,shooting,one killed,interrogation ,தியேட்டர் அதிபர், துப்பாக்கிச்சூடு, ஒருவர் பலி, விசாரணை

இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த இரண்டு பேரும் சாலையில் மயங்கி விழுந்தனர். அப்போது இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஒருவர், கற்களை எடுத்து நடராஜன் மீது எறிந்தார். அப்போது அவரையும், நடராஜன் சுட முயன்றார்.

இதில் உடனே அந்த நபர் அருகில் இருந்த மண் குவியலின் பின்னல் சென்று மறைந்து கொண்டு உயிர் தப்பினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அங்கு பழனிசாமி தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை மருத்துவர்கள் அகற்றினர். இதில் சுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதில் ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி இறந்து விட்டார். இதற்கு முன்னதாக பழனி டவுன் காவல் நிலையத்தில் சம்பவத்தை சொல்லி நடராஜன் சரண் அடைந்தார். அப்போது துப்பாக்கியையும் ஒப்படைத்தார். இதையடுத்து நடராஜனை போலீசார் கைது செய்தனர்.

Tags :