Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நியூசிலாந்து பிரதமர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

நியூசிலாந்து பிரதமர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

By: Karunakaran Thu, 13 Aug 2020 2:25:28 PM

நியூசிலாந்து பிரதமர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஆக்லாந்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு சென்று வந்தார். இதுகுறித்து செய்தி வெளியாகி, அவர் கோவிலுக்கு சென்று வரும் வீடியோக்கள் பல்வேறு தலைப்புகளில் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

ஜெசிந்தா ஆர்டர்ன் நியூசிலாந்தை கொரோனா இல்லாத நாடு என அறிவித்த பின் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாக தற்போது சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 2.54 நிமிடங்கள் ஓடுகின்றன.

new zealand,prime minister,krishnan temple,social media ,நியூசிலாந்து, பிரதமர், கிருஷ்ணன் கோயில், சமூக ஊடகங்கள்

இந்த வைரல் வீடியோவில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஆக்லாந்து நகரில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு வெளியே காலணியை கழற்றிவிட்டு சென்ற அவர், பூஜையை ஆர்வமுடன் பார்த்த பின் ஆரத்தி காண்பிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, ஆர்டர்ன் ஆகஸ்ட் 6 ஆம் தேதி கோவிலுக்கு சென்றது தெரிய வந்துள்ளது.

மேலும் அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அவர் கோவிலுக்கு சென்று வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து பிரதமர் கோவிலுக்கு சென்றதற்கும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்துவிட்டது.

Tags :