Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடுவானில் ஜெட் விமானங்கள் செய்த காரியம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரல்

நடுவானில் ஜெட் விமானங்கள் செய்த காரியம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரல்

By: Karunakaran Mon, 03 Aug 2020 2:17:50 PM

நடுவானில் ஜெட் விமானங்கள் செய்த காரியம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரல்

பிரான்சில் நாட்டில் இருந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதல் 5 ஐந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவில் உள்ள அம்பாலா விமான தளத்தில் ஜூலை 29 ஆம் தேதி களமிறங்கின. ஜூலை 27 ஆம் தேதி பிரான்சில் இருந்து புறப்பட்ட இந்த விமானங்கள் 7 ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து இந்தியாவிற்கு வந்தது.

இந்நிலையில் நடுவானில் பறக்கும் போது ஜெட் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

jet planes,middle sky,viral,social media ,ஜெட் விமானங்கள், நடு வானம், வைரல், சமூக ஊடகங்கள்

இந்த வீடியோவின் தலைப்பில் இந்தியா வரும் வழியில் 30 ஆயிரம் அடி உயரத்தில் ரஃபேல் ஜெட்களுக்கு எரிபொருள் நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ குறித்து ஆய்வு செய்தபோது, இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட பிரேசில் விமானப்படையை சேர்ந்த ஏர் ஃபோர்ஸ் எஃப்-5 ரக போர் விமானம் என்பது தெரிய வந்தது.

இந்த வீடியோவை 2018, செப்டம்பரில் பிரேசில் விமான படை பதிவிட்டுள்ளது. பிரேசில் கடற்படையின் எஃப்5 போர் விமானம், ஏ-4 போர் விமானத்திற்கு நடுவானில் எரிபொருள் நிரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதில் உள்ளது இந்தியா சமீபத்தில் வாங்கிய ரஃபேல் ஜெட் விமானங்கள் இல்லை என தெளிவாகி விட்டது.

Tags :
|