Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா குறித்த விழிப்புணர்வு கிராம மக்களிடம் அதிகம் உள்ளது; மத்திய அமைச்சர் பாராட்டு

கொரோனா குறித்த விழிப்புணர்வு கிராம மக்களிடம் அதிகம் உள்ளது; மத்திய அமைச்சர் பாராட்டு

By: Nagaraj Thu, 21 May 2020 1:39:48 PM

கொரோனா குறித்த விழிப்புணர்வு கிராம மக்களிடம் அதிகம் உள்ளது; மத்திய அமைச்சர் பாராட்டு

கொரோனா குறித்த விழிப்புணர்வு கிராமமக்களிடம் அதிகம் உள்ளது என்று பாராட்டியுள்ளார் மத்திய பஞ்சாயத்துராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: நகரங்களில் இருந்து, ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள், கிராமங்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் ஏற்படும் கொரோனா தொற்றின் தீவிரத்தை தடுக்க, அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


rural,people,awareness,corona,union minister ,கிராமப்புறம், மக்கள், விழிப்புணர்வு, கொரோனா, மத்திய அமைச்சர்

இந்நிலையில், இந்த வைரஸ் தொற்றின் தீவிரம் குறித்து, கிராமப்புற மக்கள், அதிக விழிப்புணர்வு பெற்றவர்களாக உள்ளனர். இதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும், நன்கு அறிந்து வைத்துள்ளனர். கிராமங்களுக்கு வந்து சேருவோர் அனைவரையும், முழுவதுமாக பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கூடுதல் பணிகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நிச்சயம் பெரும் சுமை தான். இதற்கு தீர்வு காண, 15 வது நிதிக்குழு மூலம், கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கு, நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களுக்கு திரும்புவோரிடம் சொந்த வீடில்லை எனில், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம், அவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்.

ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழும், அவர்களுக்கு வேலை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|