Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணுவத்தில் பணிபுரிந்து வரும் லடாக் மாவட்டத்தின் லே பகுதி கிராமத்தினர்

ராணுவத்தில் பணிபுரிந்து வரும் லடாக் மாவட்டத்தின் லே பகுதி கிராமத்தினர்

By: Karunakaran Mon, 06 July 2020 3:42:49 PM

ராணுவத்தில் பணிபுரிந்து வரும் லடாக் மாவட்டத்தின் லே பகுதி கிராமத்தினர்

இந்தியாவில் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில்தான் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் கடந்த 15-ஆம் தேதி மோதி கொண்டனர். இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லை பகுதியில் தற்போது பதற்றம் நிலவி வருகிறது.

இந்திய கடல்மட்டத்தில் இருந்து சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதி அமைந்துள்ளது. எப்போது பனி சூழ்ந்து குளிர்ப்பகுதியாகவே இந்த பகுதி காணப்படும். இந்த லடாக் மாவட்டம் லே பகுதியில் சாசோட் என்ற குட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 63 வீடுகள் உள்ளன. இந்த 63 வீட்டில் உள்ள ஆண்மகன்களும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

army,ladakh,villagers,leh area ,இராணுவம், லடாக், கிராமவாசிகள், லே பகுதி

இவர்களில் பெரும்பாலானோர் எல்லையில் உள்ள முன்கள நிலைகளில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், எனக்கு இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. அனைவரையும் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அக்கிராமத்தை சேர்ந்த மற்றோரு பெண் இதுகுறித்து கூறுகையில், எனது கணவர் ராணுவத்தில் உள்ளார். மாதத்திற்கு ஒருமுறைதான் போன் செய்வார் என்று கூறினார். பின் அங்கிருந்த ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நபர் ஒருவர், இந்த கிராமம் தேசபக்தி கொண்டது. இதனால்தான் ஒவ்வொருவரையும் ராணுவத்திற்கு அனுப்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|