Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களின் பார்வை கனடா பக்கம் திரும்புகிறது; ஆய்வில் தகவல்

உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களின் பார்வை கனடா பக்கம் திரும்புகிறது; ஆய்வில் தகவல்

By: Nagaraj Fri, 12 June 2020 6:21:11 PM

உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களின் பார்வை கனடா பக்கம் திரும்புகிறது; ஆய்வில் தகவல்

கனடா பக்கம் பார்வையை திருப்பும் மாணவர்கள்... அமெரிக்க அதிபர் டிரம்பின், குடியேற்றத்திற்கு எதிரான கொள்கைகளால், அந்நாட்டில் உயர்கல்வி கற்க விரும்பாமல், கனடாவுக்கு செல்லும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

டிரம்ப் நிர்வாகம், குடியேற்றத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சர்வதேச மாணவர் கொள்கைகளையும் கடுமையாக்கியுள்ளது. இக்காரணங்களால், இந்தியா மட்டுமின்றி, பிறநாடுகளின் மாணவர்கள், கனடாவில் உயர் கல்வி கற்க செல்வது அதிகரித்துள்ளது.

கடந்த, 2016 - 17 மற்றும் 2018 - 19ம் கல்வி ஆண்டுகளில், கனடாவில் உயர்கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

students,canada,vision,immigration policy,education ,மாணவர்கள், கனடா, பார்வை, குடியேற்ற கொள்கை, கல்வி

இந்நிலையில், கனடா, சர்வதேச மாணவர்களுக்கு ஆதரவான கொள்கைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியா, சீனா, வியட்னாம், பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆங்கில தேர்வில் வெற்றி பெற்றால், நேரடியாக, 1,400 கல்வி மையங்களில் சேரும் புதிய திட்டத்தை, 2018ல் கனடா அறிமுகப்படுத்தியது.

கொரோனா காரணமாக, அமெரிக்கா குடியேற்ற விண்ணப்பங்களை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், கனடா, உள்நாட்டில் மாணவர் விசாவில் பயில்வோருக்கு, பயணக் கட்டுப்பாடுகளில் விலக்கு அளித்துள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி, அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்திய வல்லுனர்களும் டிரம்பின் மோசமான கொள்கைகளால், கனடாவுக்கு மாறி வருகின்றனர்.

கனடா, தன் நாட்டில் ஆறு ஆண்டுகள் வசிப்போருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குகிறது. இதன் காரணமாக, கனடாவில், நிரந்தர குடியுரிமை பெற்றோர் எண்ணிக்கை 2016ல், 39 ஆயிரத்து, 340 ஆக இருந்தது, 2019ல் 85 ஆயிரத்து, 585 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|