Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைன் போர் ஓராண்டை கடந்தது... இருதரப்பிலும் அழிவுகள் தொடர்கிறது

உக்ரைன் போர் ஓராண்டை கடந்தது... இருதரப்பிலும் அழிவுகள் தொடர்கிறது

By: Nagaraj Fri, 24 Feb 2023 11:19:39 AM

உக்ரைன் போர் ஓராண்டை கடந்தது... இருதரப்பிலும் அழிவுகள் தொடர்கிறது

உக்ரைன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த போர் இதுவரை இருதரப்புக்கும் மரணத்தையும் அழிவையும் கொண்டு வந்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி, உக்ரைனில் உள்ள ரஷ்யர்களை பாதுகாப்பதாக கூறி ‘சிறப்பு இராணுவ நடவடிக்கை’ எனும் பெயரில் தங்களது படைகளை அனுப்ப ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டார்.

ஆனால், நேட்டோ கூட்டணியுடன் உக்ரைன் இணைய விருப்பம் தெரிவித்ததற்கு கோபமடைந்த புடின் இந்த போரை தொடங்கியதாக மேற்கத்தியநாடுகள் குற்றஞ்சாட்டின.

எனினும், இதனை மறுக்காத புடின், உக்ரைன் நேட்டோவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டால், உக்ரைனுக்கு பேரழிவு ஏற்படுமென அச்சுறுத்தினார். புடினின் இந்த உத்தரவு உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, உக்ரைனுக்கு ஆதரவான அல்லது ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகளை விதிக்க தூண்டியது.

threat,world security,ukraine,war world,europe ,அச்சுறுத்தல், உலக பாதுகாப்பு, உக்ரைன், போர் உலகம், ஐரோப்பியா

மேற்கத்திய நாடுகள் உக்ரைன் மீது, 10க்கும் மேற்பட்ட பொருளாதார தடைகளை விதிக்க பதிலுக்கு ரஷ்யாவும் ஜேர்மனி, மோல்டோவா போன்ற நாடுகளுக்கான எரிவாயு குழாய்த் திட்டத்தை முடக்கியது.

குறிப்பாக இந்த போர் ஓராண்டு நீடிப்பதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளே மிக முக்கிய நாடுகளாக உள்ளன. காரணம், உக்ரைனுக்கு போதிய ஆயுதங்கள் இல்லாத நிலையில், ரஷ்யாவின் எதிர்தாக்குதல்களை எதிர்கொள்ள நவீன போர் தளவாடங்களை வழங்கி உதவி வருகின்றது.

இந்த போர், இதுவரை இருதரப்புக்கும் மரணத்தையும் அழிவையும் கொண்டு வந்துள்ளது. போர் உலகம் முழுவதும் ஆற்றல், உணவு விலைகளை பாதித்துள்ளது மற்றும் ஐரோப்பிய மற்றும் உலகளாவிய பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்துகிறது.

Tags :
|