Advertisement

பவானி சாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது

By: Nagaraj Fri, 13 Nov 2020 7:31:39 PM

பவானி சாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது

தற்போதைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்வரத்து 878 கன அடியில் இருந்து 389 கன அடியாக குறைந்துள்ளது.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

water reserve,bhavani sagar,kanaadi,rain water,nilgiris ,நீர் இருப்பு, பவானி சாகர், கனஅடி, மழை நீர், நீலகிரி

இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் அணைக்கு வருகிறது.

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.09 அடியாக உள்ளது. அணையின் நீர்வத்து 878 கன அடியில் இருந்து 389 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து 3,100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது பவானிசாகர் அணையில் 25.7 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.

Tags :