Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது

By: vaithegi Wed, 12 Oct 2022 09:53:26 AM

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது

மேட்டூர் : மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது .... அணைக்கு வரும் தண்ணீரின் உயர்ந்துள்ளது. நேற்று காலை 20,626 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 33,420 கனஅடியானது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 8,000 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இதனை அடுத்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 900கனஅடியிலிருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் நேற்று மாலை 119.74 அடியாக அதிகரித்தது.

mettur,water level ,மேட்டூர் ,நீர்மட்டம்

நள்ளிரவு நேரத்தில் அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியதையடுத்து, உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேலும் மின்சார உற்பத்திக்காக 26 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
|