Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த மாதம் 5-ம் தேதி காலை 9 மணியில் இருந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடி

கடந்த மாதம் 5-ம் தேதி காலை 9 மணியில் இருந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடி

By: vaithegi Fri, 02 Sept 2022 10:37:17 PM

கடந்த மாதம் 5-ம் தேதி காலை 9 மணியில் இருந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடி

ஈரோடு: தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என்று கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 700 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு உபரிநீராக 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

water level,bhavanisagar dam ,நீர்மட்டம் ,பவானிசாகர் அணை

இதனை அடுத்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து வருவதால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. எனவே இதன் காரணமாக அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரத்து 100 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து உபரி நீராக பவானி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த மாதம் 5-ம் தேதி காலை 9 மணியில் இருந்து அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாகவே உள்ளது.

Tags :