Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு காலநிலை இப்படி தான் இருக்குமாம்

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு காலநிலை இப்படி தான் இருக்குமாம்

By: vaithegi Wed, 23 Aug 2023 2:56:52 PM

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு காலநிலை இப்படி தான் இருக்குமாம்

சென்னை: அடுத்த ஒரு வாரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் ... தமிழகத்தில் கோடை காலம் முடிவடைந்தாலும் வெப்பத்தின் தாக்கம் தற்போது வரை குறையாமல் அதே நிலையில் இருந்து கொண்டு வருகிறது.

இதையடுத்து கடந்த வாரத்தில் வெப்பநிலையானது 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த வாரம் தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் அவ்வபோது லேசான முதல் கனமழை வரை பெய்து கொண்டு வருகிறது.

climate,rain ,காலநிலை ,மழை

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலைவுவதாக அறிவித்தது. அதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அத்துடன் நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் வெப்பநிலையானது குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கக்கூடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :