Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தை சில்லென மாற்றும் வானிலை..விட்டு விட்டு பெய்யும் மழை..ரசிக்கும் மக்கள்..

தமிழகத்தை சில்லென மாற்றும் வானிலை..விட்டு விட்டு பெய்யும் மழை..ரசிக்கும் மக்கள்..

By: Monisha Wed, 06 July 2022 9:26:28 PM

தமிழகத்தை சில்லென மாற்றும் வானிலை..விட்டு விட்டு பெய்யும் மழை..ரசிக்கும் மக்கள்..

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் கோடைக் காலம் முடிந்துள்ள நிலையில், பல இடங்களில் பரவலாகப் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. சில நாட்களாகவே தலைநகர் சென்னையிலும் கூடகோடை இரவு நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த அறிவிப்பைச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

rain,people,weather,night , கோடை,இரவு,வானிலை,கனமழை ,

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதி, தென் தமிழக கடலோரப் பகுதிகள்.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

Tags :
|
|