Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெள்ளை மாளிகை உறுதி செய்தது... இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

வெள்ளை மாளிகை உறுதி செய்தது... இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

By: Nagaraj Fri, 11 Nov 2022 9:05:21 PM

வெள்ளை மாளிகை உறுதி செய்தது... இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

வாஷிங்டன்: இந்தோனேசியாவின் பாலி தீவில் நவம்பர் 14ம் தேதி நடைபெறும் ஜி 20 மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

வரும் 14,15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் சீன அதிபருடன் ஜோ பைடனின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

united states,officials,russia,negotiations,china,contradictions ,அமெரிக்கா, அதிகாரிகள், ரஷ்யா, பேச்சுவார்த்தை, சீனா, முரண்பாடுகள்

இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போட்டி உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இச்சந்திப்பில் இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான முரண்பாடுகளைப் பேசித் தீர்க்கவும் இந்த வாய்ப்பை இருவரும் பயன்படுத்திக் கொள்ள உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Tags :
|
|