Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம்

By: Nagaraj Tue, 08 Dec 2020 09:12:32 AM

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம்

நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு... மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் சாா்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டில்லியில் கடந்த சில நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனா். விவசாயிகளின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் மத்திய அரசின் சட்டங்கள் உள்ளதாக அவா்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

மத்திய அரசு இதுவரை 5 கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ள போதிலும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சாா்பில் நாடு முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜவாதி, தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சிவசேனை, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா உள்ளிட்ட கட்சிகள் விவசாயிகளின் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

full blockade,security,precaution,state governments ,முழு அடைப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை, மாநில அரசுகள்

அகில இந்திய மோட்டாா் வாகனங்கள் சங்கம் (ஏஐஎம்டிசி), அகில இந்திய ரயில் ஊழியா்கள் கூட்டமைப்பு (ஏஐஆா்எஃப்) உள்ளிட்டவையும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. முழு அடைப்புப் போராட்டத்தை எதிா்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும் மேற்கொண்டுள்ளன.

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கும் வலியுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது தொடா்பாக அதிகாரிகள் சிலா் கூறுகையில், ‘‘போராட்டத்தில் ஈடுபடுவோா், கொரோனா நோய்த்தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளி உள்ளிட்டவை கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

போராட்டத்தின்போது எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்காக, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு வலியுறுத்தி உள்ளோம்’’ என்றனா்.

Tags :