Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிரடியாக விவாகரத்து முடிவை எடுத்த அமெரிக்க போலீசின் மனைவி

அதிரடியாக விவாகரத்து முடிவை எடுத்த அமெரிக்க போலீசின் மனைவி

By: Nagaraj Tue, 02 June 2020 1:17:35 PM

அதிரடியாக விவாகரத்து முடிவை எடுத்த அமெரிக்க போலீசின் மனைவி

அமெரிக்காவில் கருப்பின இளைஞரின் கழுத்தில் காலை வைத்து மிதித்து கொன்ற போலீஸ்காரரை விவகாரத்து செய்ய அவரது மனைவி முடிவு எடுத்துள்ளார்.

அமெரிக்காவில் மின்னெபோலிஸ் பகுதியைச் சேர்ந்த கருப்பின இளைஞரான 46 வயதுடைய ஜார்ஜ் பிளாய்ட் கடந்த 27ஆம் தேதி கள்ள நோட்டு பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தி இறுக்கினார் போலீஸ்காரர் ஒருவர்.

minneapolis,wife,divorce decision,agony ,மின்னபோலிஸ், மனைவி, விவாகரத்து முடிவு, வேதனை

இதில் துடிதுடித்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார் ஜார்ஜ். இது தொடர்பான வீடியோவும் வெளியானது. இந்த சம்பவம் உள்நாட்டு பிரச்சனையாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது. ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன.

மேலும் இந்த போராளிகளை நாய்கள், திருடர்கள் என்று அதிபர் டிரம்ப் சொல்லி உள்ளது மேலும் கொதிப்பை தந்து வருகிறது. கருப்பின இளைஞரை கொலை செய்த அந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

minneapolis,wife,divorce decision,agony ,மின்னபோலிஸ், மனைவி, விவாகரத்து முடிவு, வேதனை

இந்நிலையில், கழுத்தை நெரித்து ஜார்ஜை கொன்ற அந்த போலீஸ்காரரை அவரது மனைவி விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தன்னுடைய கணவர் செய்த காரியம், தன்னை மனதளவில் அளவுக்கு அதிகமாக பாதித்துவிட்டதாகவும், அதனால் ஆழ்ந்த வேதனைக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|